×

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்கள் விரதம் இருக்க 21 இடங்களில் கொட்டகை

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நாளை தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18ம் தேதியும், மறுநாள் திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 18ம் தேதி மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி கடற்கரையில் சூரசம்ஹாரம்நடக்கிறது.கந்தசஷ்டியை முன்னிட்டு விரமிருக்கும் பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கியிருக்க வசதியாக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்ரையை சுத்தப்படுத்தி, பொக்லைன் மூலம் சமன் செய்யும் பணியும் நடந்தது.

The post திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்கள் விரதம் இருக்க 21 இடங்களில் கொட்டகை appeared first on Dinakaran.

Tags : Gandashashti festival ,Tiruchendur ,Ebengudi ,Tiruchendur Subramania Swamy Temple ,Yagasala ,Puja ,Subramania ,Swami ,Gandhashashti festival ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்