×

பயிற்சி காலத்தில் குற்ற வழக்கை மறைத்ததாக காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த்ராஜ். இவர், கடந்த 2013ம் ஆண்டு நடந்த 2ம் நிலை காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். கீழ்ப்பாக்கம் குடியிருப்பில் நின்ற போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தன் மீதான வழக்கை மறைத்து அவர் போலீஸ் பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறி, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அரவிந்த்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. என்னை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விஷயத்தில் மனுதாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை. எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை 2 வாரங்களில் மீண்டும் பணியில் சேர்த்து பயிற்சி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post பயிற்சி காலத்தில் குற்ற வழக்கை மறைத்ததாக காவலரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arvindraj ,Kilpakkam ,ICourt ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!