×

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே, கடந்த 24ம் தேதி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 14 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் (42), நீட் விலக்கு மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்ந்து கருக்கா வினோத்தால் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்களில் ரவுடி கருக்கா வினோத் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருவதாகவும், பதற்றமான சூழ்நிலை உருவாகுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில், கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

The post ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சென்னை காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karuka Vinod ,Chennai Police ,Commissioner ,Chennai ,Kindi ,Governor ,Governor's ,House ,Dinakaran ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...