×

ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. ரவுடி கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த மாதம் 25ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

The post ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Rawudi Karuka Vinod ,Governor's House Road ,Chennai ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...