×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுகை கடைவீதியில் அலைமோதிய கூட்டம்

 

புதுக்கோட்டை,நவ.11: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை கீழ ராஜவீதி வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் குடும்பம் குடும்பமாக புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சாலையோரம் துணிக்கடை முதல் காலனி கடை வரை அமைத்து விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள், தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது.தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட நாடு முழுவதும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ள புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட கீழராஜா வீதி வடக்கு ராஜ வீதி தெற்கு ராஜ வீதி அண்ணா சிலை பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

மேலும் இப்பகுதியில் வர்த்தக வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி தீபாவளி பண்டிகையை நம்பி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் அதேபோல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சாலையோர வியாபாரிகள் தரைக்கடைகள் அமைத்து ஆடைகள் பேன்சி பொருட்கள் காலனிகள் பாத்திரங்கள் குடை போர்வை வாட்ச் பெல்ட் மிதியடிகள் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். மேலும் பொதுமக்களும் ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை தேடி பிடித்து வாங்கி வருகின்றனர்.மேலும் இந்த ஆண்டு புது வரவாக பல்வேறு ஆடைகள் வந்துள்ள நிலையில் அந்த ஆடைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுகை கடைவீதியில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Budhukai ,Pudukkottai ,Rajavethi North Raja Road ,
× RELATED குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 349 மனுக்கள் மீது உடனடி விசாரணை