×

2.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

 

மல்லசமுத்திரம், நவ.11: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 60 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். காங்கேயம் மற்றும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதலுக்காக வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கிலோ ₹76.25 முதல் ₹83.95 வரையிலும், இரண்டாம் தரம் ₹64.25 முதல் ₹72.75 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 60 மூட்டை கொப்பரை ₹2.45 லட்சத்திற்கு ஏலம் போனதாக சங்க செயலாளர் கணேசன்
தெரிவித்தார்.

The post 2.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Kopprai ,Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Coppar ,
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்