×

நான் முதல்வன் நிரல் திருவிழா

 

கரூர், நவ. 11: நான் முதலவன் நிரல் திருவிழா பயிற்சிபட்டரையை கலெக்டர் தொடங்கிவைத்தார்.கரூர் மாவட்ட கலெக்டா அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், நான் முதல்வன் நிரல் திருவிழா என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நான் முதல்வன் நிரல் திருவிழா என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை மாவட்டம்தோறும் நடத்துவதற்கு அறிவுறுத்தலின்படி, இந்த புத்தாக்க பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.இந்த புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் புதியதாக கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான புத்தாக்க தேவைகள், பிரச்னைகள் கண்டறிதல் என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டாக நடத்துவார்கள்.

இந்த பயிற்சியின் போது, கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு இந்த நான் முதல்வன் நிரல் திருவிழாவுக்கான அடிப்படையாக செயல்படும் புத்தாக்க பிரச்னைகள் தேவைகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து அதனடிப்படையில, உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவுள்ளார்கள். `இந்த பயிற்சி பட்டறையில் தொழில்நுட்ப பயிற்சிகளை தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் முதன்மை பயிற்சியாளர்கள் வழங்குவார்கள்.

இந்த ஒரு நாள் நிரல் திருவிழா பயிற்சி பட்டறையில், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு புத்தாக்க பிரச்னைகள் குறித்த தேவை என்ன என்பதை தெரிவித்து பயிற்சி பட்டறையினை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட அலுவலர் சீனிவாசன், தொழில் மைய மேலாளர் ரமேஷ், உதவி இயக்குநர் திறன் பயிற்சி பார்த்தீபன், புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை பயிற்சியாளர் விஜய சக்கரவர்த்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post நான் முதல்வன் நிரல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Karur ,Collector ,Nan Mulavan Program Festival ,Karur District Collectorate Office ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...