×

தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

 

தர்மபுரி, நவ.11: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனைத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்படுகிறது. தற்போது, சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக, பெண்களுக்கு திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உற்பத்தி ஊழியர் பயிற்சி, தாட்கோ சார்பில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும்.

மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ₹18 ஆயிரம் முதல் ₹18,500 வரை பெற வழிவகை செய்யப்படும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணத்தை தாட்கோ வழங்கும். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : TADCO ,Dharmapuri ,District ,Collector ,Shanti ,Adi ,Dravidians ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...