×

மக்கள் கூடும் இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள்

 

தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி மணிவண்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை நாளைமறுநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த 4 நாட்களாகவே வேலூர் நகரம் களைக்கட்டியுள்ளது. ஜவுளிக்கடைகள், நகை கடைகள், பட்டாசு இனிப்பு பலகார கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட், மெயின் பஜார் என மார்க்கெட் பகுதிகள் மக்கள் நெரிசலுடன் காட்சி அளிக்கின்றன. அதேபோல் பஸ் நிலையங்கள், காட்பாடி ரயில் நிலையம் ஆகியவை உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளால் நிரம்பி வழிந்தது.

இதையொட்டி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பழைய, புதிய பஸ் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், மாநில எல்லை சோதனைச்சாவடிகள், மாவட்ட எல்லைகளில் சீருடையிலும், சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி-சித்தூர் பஸ் நிலையம், மண்டி வீதி, லாங்கு பஜார் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post மக்கள் கூடும் இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...