×

விக்கிரவாண்டி அருகே பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு

 

விக்கிரவாண்டி, நவ.11: விக்கிரவாண்டி அருகே பெருமாள் கோயிலில் பழமை வாய்ந்த 3 ஐம்பொன் சிலைகளை திருடி சென்றவர்களை போலீசார் ேதடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பெரிய தச்சூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அதே பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (78). அர்ச்சகர். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோயில் கருவறையை பூட்டாமல் வெளியே உள்ள கதவை மட்டும் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலை திறக்க வந்தார்.

அப்போது, கோயில் கருவறையில் இருந்த ஐம்பொன் சிலைகளான தலா ஒன்றரை அடி உயரம் கொண்ட பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய 3 சிலைகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து நரசிம்மன் அளித்த புகாரின் பேரில் பெரிய தச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் வந்தது. ஆனால், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. திருடு போன சிலைகள் மிகவும் பழமை வாய்ந்தவை. அதன் மதிப்பு குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post விக்கிரவாண்டி அருகே பெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Perumal temple ,Vikravandi ,Iambon ,Perumal ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...