×

பூலுவபட்டி மாநகராட்சி பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி

 

திருப்பூர், நவ.11: திருப்பூர் பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், தீயணைப்புத் துறை சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதில் உள்ள பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் தலைமையில் ேநற்று நடைபெற்றது. மாணவ, மாணவிகளை வைத்து தீயணைப்பு வீரர்கள் ராஜ், தீனதயாளன், வெங்கடேஷ் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்த்திக் காட்டினர்.

தீயணைப்பு குறித்து பொதுவான நடைமுறைகளை செயல் விளக்கம் மூலம் செய்துக் காட்டினர்.தொடர்ந்து பட்டாசு வெடிப்பதன் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர். நிறைவில் தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜாஸ்மின் மாலை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

உடுமலை, நவ.11: உடுமலையில், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் நீட் தேர்வு விலக்கு நமது இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத் தலைவர் குட்டி என்ற சிவப்பிரகாசம், துணை அமைப்பாளர்கள் முருகநாதன், தென்றல், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

The post பூலுவபட்டி மாநகராட்சி பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Pooluvapatti Municipal School ,Tirupur ,Tirupur Pooluvapatti Municipal Primary ,School ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்