×

பழவேற்காடு முகத்துவார பகுதிகளில் கலெக்டர் ஆய்வு: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

 

பொன்னேரி: பழவேற்காட்டில் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் முகத்துவார பகுதிகளை கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.  பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையிலும், பழவேற்காடு முகத்துவாரத்தின் குறுக்கே அமைந்துள்ள மணல் திருட்டுகளை வெட்டி திறந்து விடப்படும் இடத்தையும், அப்பகுதி மீனவ கிராம மக்களுடன் சேர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

பின்னர், அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொதுப்பணித்துறை (நீர்வளம்) செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் ஜனார்த்தனன், பொன்னேரி தாசில்தார் மதிவாணன் உள்பட பலர் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர்.

The post பழவேற்காடு முகத்துவார பகுதிகளில் கலெக்டர் ஆய்வு: அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palavekadu ,Ponneri ,Collector ,T. Prabhu Shankar ,Palavekkad ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு சுற்றுலா பகுதியில்...