×

தொடர்மழையால் மலையேறத் தடை; சதுரகிரி அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு

வத்திராயிருப்பு: தொடர்மழையால் சதுரகிரி மலையேற தடை விதித்ததால் நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் அடிவாரத்தில் வழிபாடு செய்தனர்.மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு நேற்று முதல் 14ம் தேதி வரை அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சதுரகிரி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் ேகாயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.இதனிடையே பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு நேற்று வருகை தந்த பக்தர்கள், அடிவார பகுதியில் வனத்துறை கேட்டின் முன்பு வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

The post தொடர்மழையால் மலையேறத் தடை; சதுரகிரி அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Vathirayiru ,Dinakaran ,
× RELATED மழை தொடர்வதால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு