×

‘கொரோனா குமார்’ படத்தை முடிக்காமல் வேறு படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க முடியாது: தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ‘கொரோனா குமார்’ என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரி வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் சிம்பு தரப்பில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவிட்டார். மேலும், கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற வேல்ஸ் நிறுவன கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கோ அல்லது வேறு படங்களிலோ நடிப்பதற்கு தடை விதித்தால் மற்ற நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக அவர் மேற்கொண்ட பணிகளை பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

The post ‘கொரோனா குமார்’ படத்தை முடிக்காமல் வேறு படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க முடியாது: தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Simbu ,Chennai ,Wales Films International ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...