×

பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் விவசாயிகளிடம் கடுமை காட்ட வேண்டியதில்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தஞ்சையைச் சேர்ந்த வக்கீல் ஜீவகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் காரிப் பருவத்தில் 1.32 லட்சம் ஏக்கர், டெல்டா பகுதியில் 3.50 லட்சம் ஏக்கர், ராபி பருவத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயப் பணிகள் நடக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக காரிப் பருவத்திற்கு பிரதமரின் பயிர் காப்பீடு முறையாக வழங்கப்படவில்லை. தற்போதைய காரிப் பருவத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பாதித்துள்ளனர். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.13,500 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தை நவ. 15க்கு முன்னதாக கூட்டவும், இதில், காரிப் பருவத்திற்கான காப்பீடு நிறுவனம் தொடர்பான டெண்டரை இறுதி செய்யுமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர், ‘‘விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமை காட்ட வேண்டியதில்லை. அவர்களை மென்மையாக நடத்தவேண்டும். முப்போகம் விளைந்த நிலையில் ஒருபோகம் விளைவதே கேள்விக்குறியாக உள்ளது. அரசின் திட்டங்கள் அவர்களை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். ராபி மற்றும் காரிப் பருவம் எப்போது துவங்கி, எப்போது முடிகிறது என்பது குறித்து ஒன்றிய ேவளாண் துறை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி விசாரணையை நவ. 24க்கு தள்ளி வைத்தனர்.

The post பயிர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் விவசாயிகளிடம் கடுமை காட்ட வேண்டியதில்லை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Jivakumar ,Tanjore ,Court of Appeal ,Kharif ,Thanjavur ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...