×

அரச பரம்பரையில் தொடங்கி இன்றைய பிரபலம் வரை தேர்தலில் 44 வாரிசுகளை களமிறக்கியது காங்கிரஸ், பாஜக: ராஜஸ்தான் தேர்தல் களத்தில் விநோதம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தல் களத்தில் 44 வாரிசுகளை ஆளும் காங்கிரசும், பாஜகவும் இறக்கியுள்ளன. இவர்கள் அரச பரம்பரை தொடங்கி இன்றைய பிரபலங்கள் வரை உள்ள வாரிசுகள் ஆவர். ராஜஸ்தானில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் தாக்கிக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இரு கட்சிகளிலும் அரசியல் வாரிசுகள் போட்டியிடுவதால், ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அரசியல் வாரிசுகள் தேர்தலில் போட்டியிடுவது அதிகமாக உள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 44 வாரிசு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இவர்களில் அதிகபட்சமாக காங்கிரசை சேர்ந்த 24 குடும்பங்களின் வாரிசுகளும், பாஜகவை சேர்ந்த 20 குடும்பங்களின் வாரிசுகளும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

அந்த வகையில் ‘மதர்னா’ குடும்பமாக இருந்தாலும் சரி, ‘மிர்தா’ குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த குடும்பங்களின் தலைவர்கள் தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துவிட்டால், தங்களது வாரிசுகளை அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டு தேர்தல் களத்தில் இறக்கிவிடுன்றனர். மதர்னா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த திவ்யா மதர்னா என்பவர் 16வது முறையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். மிர்தா குடும்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். சிலருக்கு கட்சிகள் வாய்ப்பு அளித்தாலும், சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் அமைச்சர் சாந்தி தரிவால், தனது மகனை காங்கிரஸ் சார்பில் களமிறக்கி உள்ளார். பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் யாதவ் தனது மகன் மோஹித் யாதவுக்கு பாஜகவில் சீட்டு கேட்டு இருந்தார்.

ஆனால் 2018ல் மோஹித் யாதவ் தோல்வியடைந்ததால், தற்போது தந்தை ஜஸ்வந்த் யாதவ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் 24 குடும்பங்களுக்கு சீட்டு கொடுத்துள்ளது. அவர்களில் வீரேந்திர சிங், டத்தராம்கர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். வீரேந்திர சிங்கின் தந்தை நாராயண் சிங் இந்த தொகுதியில் ஏழு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். மீனாகர் என்பவர் ஷெர்கர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இவரது மாமனார் முன்னாள் அமைச்சரும், ஷேர்கரில் இருந்து 7 முறை எம்எல்ஏவாக தேர்ந்ெதடுக்கப்பட்டார். அமர் தொகுதியில் இருந்து பிரசாந்த் சர்மாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை சஹ்தேவ் சர்மா 1998ம் ஆண்டு அமர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். கோபால்கர் ெதாகுதியில் இருந்து கீதா பர்வாத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ நர்பத் ராமின் மகள் ஆவார். முன்னாள் எம்எல்ஏ மக்பூல் மண்டேலியாவின் மகன் ரபீக் மண்டேலியா சுரு தொகுதியில் போட்டியிடுகிறார். நோகா தொகுதியில் போட்டியிட சுசீலா துடிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ராமேஷ்வர் துடியின் மனைவி ஆவார்.

சவாய் மாதோபூர் தொகுதியில் முன்னாள் ஆளுநர் அப்ரார் அகமதுவின் மகன் டேனிஷ் அகர்வால் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கு டோங்கில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன் ஆவார். இதேபோல் பாஜகவில் கோலாயத் தொகுதியில் ஏழு முறை போட்டியிட்ட தேவி சிங் பதியின் மகன் அன்ஷுமன் சிங்கும், பால்மர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் லாலாராவின் மகன் தீபக் கட்வாசரா போட்டியிடுகின்றனர். நாட்பாய் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நட்வர்சிங்கின் மகன் ஜகத் சிங், லட்னு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மனோகர் சிங்கின் மகன் கர்னி சிங், தியோலியில் எம்பி கிரோரி சிங் பைஸ்லாவின் மகன் விஜய் பைஸ்லா, வித்யாதர் நகர் தொகுதியில் அரச குடும்பத்தை சேர்ந்த முன்னாள் எம்பி கர்னி சிங்கின் பேத்தி தியா குமாரி, கும்ஹர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திகம்பர் சிங்கின் மகன் ஷைலேஷ் சிங் இவ்வாறாக பலரும் போட்டியிட்டுள்ளனர்.

The post அரச பரம்பரையில் தொடங்கி இன்றைய பிரபலம் வரை தேர்தலில் 44 வாரிசுகளை களமிறக்கியது காங்கிரஸ், பாஜக: ராஜஸ்தான் தேர்தல் களத்தில் விநோதம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan ,Jaipur ,BJP ,
× RELATED ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!!