×

கனமழை காரணமாக கொடைக்கானல் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

கொடைக்கானல்: 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கொடைக்கானல் அருகே கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் விடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் தாலுகாவில் இருக்கக்கூடிய கடைக்கோடி கிராமமாக இருப்பது சின்னாறு, சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட கிராமங்கள்.

இந்த கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரக்கூடிய 3 கிராம மக்களுமே சோத்துப்பாறை அணையிலிருந்து காட்டுவழி பயணமாக கல்லாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டும். தற்போது 3 நாட்கள் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கல்லாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெறுகின் காரணமாக தற்போது கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் வெளியே வரமுடியாமலும், வெளியே இருக்கக்கூடிய மக்கள் கிராமத்திற்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குழந்தைகள் அனைவருமே தரை தளங்களில் இருக்கக்கூடிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தீபாவளி விடுமுறை என்பதால் அவர்கள் குழந்தைகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மக்கள் ஆற்றை கடந்து வந்தாலும் கயிறுகட்டி மிகவும் ஆபத்தான முறையில் தீபாவளி சாமான் மற்றும் ரேஷன் பொருட்களை கொண்டு வருகின்றனர். கொடைக்கானலில் இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருப்பதால் அந்த பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் இந்த 4 கிராமங்களுக்குமே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக கொடைக்கானல் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kalla ,Kodaikanal… ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்