×

சதுரகிரி கோவிலுக்கு அருகே உள்ள ஓடைகளில் வெள்ளம்: கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

விருதுநகர்: சதுரகிரி கோவிலுக்கு அருகே உள்ள ஓடைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்திரமாகலிங்க திருக்கோவில் சுமார் 4500 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்த கோவிலுக்கு வனபாதை வழியாக மட்டுமே செல்ல முடியும். குறிப்பாக மழை காலங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிரதோஷம், சிவராத்திரி வரக்கூடிய அமாவாசை தினங்களை முன்னிட்டு 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெல்ல பெருக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகையால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த நீரோடையில் இரங்கி குளிக்க வாய்ப்பிருப்பதால் இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களும் தற்போது அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாங்கனி ஓடை, சங்கிலி பாறை பகுதிகளில் நீர் வரத்து சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இன்று காலை கோவிலுக்குள் செல்ல வந்த பக்தர்கள் வனத்துறை அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கேட்டின் அருகே முடிகாணிக்கை செலுத்திவிட்டு, சாமி தரிசம் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

The post சதுரகிரி கோவிலுக்கு அருகே உள்ள ஓடைகளில் வெள்ளம்: கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chathuragiri temple ,Virudhunagar ,Srivilliputdur ,Chathuragiri ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...