×

ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு தடை ரத்து செய்யப்பட்டது பற்றி ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு தடை ரத்து செய்யப்பட்டது பற்றி ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்ற அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஆளுநர் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் இந்த சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளனர். ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் வேறுபாடுகள் உள்ளன.

ஆன்லைனில் விளையாடும்போது அது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விளையாட்டாக உள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் எங்கள் வழக்கறிஞர்கள் திறமையான வாதங்களை முன் வைத்தனர். இருந்தபோதிலும் நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆன்லைன் ரம்பி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தீர்ப்பை பற்றி விமர்சிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பரிசீலனை செய்யப்படும்.

ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு வயது, காலவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும். சட்டத்துறை ஆலோசனையில் மேல்முறையீடு தேவை என கூறினால் மேல்முறையீடு செய்வோம். அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துகளை பெற்று சட்டத்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ஒழுங்குமுறைப்படுத்த கூடிய விளையாட்டுகள் சட்டப்படி ஒழுங்குமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

The post ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு தடை ரத்து செய்யப்பட்டது பற்றி ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...