×

பெரியகுப்பம் மீனவ பகுதியில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகள்: கலெக்டர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசிக்கின்றனர். கடந்த வாரம் பெய்த கனமழையால் இங்குள்ள வீடுகள், மீன்பிடி படகுகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் பலத்த சேதமடைந்தன. தகவலறிந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் வெற்றிவேலன், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுண்ணாம்புகுளம் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மீனவ குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் ஜெயக்குமார், தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியினர், `இங்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சுமார் 150 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது 75க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது’ என மீனவப்பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஒவ்வொரு தொகுப்பு வீட்டுக்குள் கலெக்டர் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இப்பிரச்னை குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து, இங்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். பின்னர் அங்கு சேதமான படகுகள், வலைகளை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்த ஆய்வில் ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத் தலைவர் மாலதி குணசேகரன், வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்….

The post பெரியகுப்பம் மீனவ பகுதியில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kummitypoondi ,Limestone Padrakashi Bhariaguppam ,Kummipundi ,
× RELATED கும்மிடிப்பூண்டியில் கந்துவட்டி...