×

பூசாரிகள் பேரமைப்பு கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல், நவ. 10: திண்டுக்கல்லில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்துசாமி வரவேற்றார். கூட்டத்தில் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும், அரசால் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளில் பூசாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட செய்தி தொடர்பாளர் குமார் நன்றி கூறினார்.

The post பூசாரிகள் பேரமைப்பு கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Priests' Association ,Dindigul ,Priests Association ,State ,Joint Secretary ,Udayakumar ,Dinakaran ,
× RELATED வருவாய் இல்லாத கோயில்களுக்கு 100 யூனிட்...