×

பொது சட்ட நுழைவுத்தேர்வு பயிற்சி முகாம் துவங்கியது

 

விருதுநகர், நவ.10: பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் துவங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான CLAT(Common Law Admission Test)-2023 பயிற்சி முகாமினை விருதுநகர் ஷத்ரியா வித்யா சாலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

மேலும் மாதிரி வினாக்களுக்கு தீர்வு அளித்து, மாணவர்களுக்கு விளக்கி பாடம் கற்பித்தார். பின்னர், அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில்

பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். மேலும், இந்த போட்டித்தேர்வில் வரும் கேள்விகளுக்கு குறைந்தபட்ச புரிதலும், தொடர் பயிற்சியும், கடந்தாண்டு வினாத்தாள்களை ஆராய்ந்தும் தங்களை தயார்படுத்திக் கொண்டால், தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, கல்வி அலுவலர் இந்திரா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பொது சட்ட நுழைவுத்தேர்வு பயிற்சி முகாம் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : General Law Entrance Exam ,Camp ,Virudhunagar ,Entrance ,Public Law Entrance Exam ,Dinakaran ,
× RELATED மாநகர காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாம்