×

சிறுவனை வெட்டிய வாலிபர்கள் கைது

ஆவடி: வில்லிவாக்கம் வள்ளியம்மை நகர் முதல் தெரு சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மகன் அப்பு (எ) சந்துரு (16). கடந்த 13ம் தேதி சந்துரு மொபட்டில் அக்காவின் 3 வயது குழந்தையை அழைத்துக் கொண்டு அயப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது, திருவேற்காடு – அயப்பாக்கம் சாலையில் சந்துருவை பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில், 3 வயது குழந்தைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார்  வழக்கு பதிவு செய்து கொளத்தூர் ஜி.கே.எம் காலனி சாய் நகர் 3வது தெரு சேர்ந்த ஹரிஹரன் (20), கம்பர் நகரை சேர்ந்த வெள்ளை (எ) மபசீர் அகமது (21) ஆகியோரை நேற்று கைது செய்தனர்….

The post சிறுவனை வெட்டிய வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Santhosh Kumar ,Villivakkam Valliammai Nagar ,Appu (A) Sanduru ,
× RELATED ரேசன் கடை விற்பனையாளரிடம் இருந்து...