×

மாஜி படைவீரர்களின் வாரிசுகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை

 

கரூர், நவ. 10: முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தவர்களுக்கு, 2023-24ம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியில் 60 சதவீதம் பெற்றவர்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விபரக் குறிப்பின்படி இணையம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30ம்தேதிககுள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு திருச்சி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post மாஜி படைவீரர்களின் வாரிசுகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Prime ,Karur ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...