×

போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழியில் கண்காணிப்பு மையம் திறப்பு

 

சீர்காழி,செப்.10: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் மூன்று சாலை சந்திப்பில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் ஒலிப்பெருக்கியுடன் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பிறைசந்திரன் தலைமை வகித்தார். சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் பங்கேற்று கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழியில் கண்காணிப்பு மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Traffic Police ,Sirkazhi, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி