×

கால்நடைகள் பராமரிப்புக்கு கடன் ஆர்முள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

 

நாகப்பட்டினம்,நவ.10: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் Ghar Ghar KCC Abhiyan Saturation Drive திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புக்காக கிஷான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. கிஷான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் மாடு, ஆடுகள் வளர்ப்பிற்கான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

ஒரு மாடுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் விவசாயிகளிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரமும், 10 ஆடுகளுக்கு ரூ.18 ஆயிரம் வீதம் தங்களிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உங்களது விண்ணப்பங்கள் அனுப்பிட வரவேற்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றின் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டும்.

டிசம்பர் 31ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்போது மாடுகள், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது. அடுத்த ஒரு வருடத்திற்கு 4 சதவீதம் வட்டியும், அதற்கு மேற்பட்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் 7 சதவீதம் வட்டியும் நிர்ணயிக்கப்படும். அதிகபட்சமாக காலஅவகாசம் 5 ஆண்டுகள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கால்நடைகள் பராமரிப்புக்கு கடன் ஆர்முள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,District ,Collector ,Janidam Varghese ,Nagapattinam district ,
× RELATED நாகப்பட்டினத்தில் கறவை மாடு கடன்பெற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது