×

அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

 

விராலிமலை, நவ.10: அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி, வேப்பன்கன்னிபட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிலர் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் (61) என்பவர் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Annawasal ,Viralimalai ,Tamil Nadu government ,Klikkudi, Veppankannipatty ,Dinakaran ,
× RELATED இலுப்பூர் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்