×

முத்துப்பேட்டை அருகே ஓவரூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

 

முத்துப்பேட்டை, நவ. 10: முத்துப்பேட்டை அருகே ஓவரூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பிரிந்து ஓவரூர் செல்லும் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை உள்ளது. இந்த சாலை ஓவரூர், வெள்ளங்கால் செல்லும் முக்கிய சாலையாகும். ஓவரூர் மட்டுமின்றி சுற்று பகுதி கிராம மக்கள் தொலைதூர பயணம் செல்ல இவ்வழியாக தான் பல்வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் இரண்டு நெல் குடோன், ரைஸ்மில் போன்றவை உள்ளன். இந்த சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் தரமின்றி இந்த சாலை அமைக்கப்பட்டதால் சில மாதங்களிலேயே சேதமாகிவிட்டது. குறிப்பாக பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கசாலையிலிருந்து பிரிந்து ரைஸ் மில் அருகே உள்ள பாலம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் சாலை நெடுகிலும் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக சாலையின் மேற்கு பகுதி சாலை உள்வாங்கியுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, தினம்தோறும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஓவரூர் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை அருகே ஓவரூர் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Overur ,Muthuppet ,Muthupet ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே மின்சாரம்...