×

கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு பயிற்சி

 

ஈரோடு, நவ.10: பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் கலைஞர் திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு ரபி பருவ விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் ஜெகதீஸ்காந் வாழையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நெற்பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுதல் குறித்து ஆலோசனை கூறினர்.

விதை சுத்திகரிப்பு அலுவலர் முருகேசன் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய பயிர்சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா, உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன் மற்றும் பூங்கோதை ஆகியோர் செய்திருந்தனர்.

The post கிராம வேளாண் முன்னேற்றக்குழு விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Village Agriculture Development Committee ,Erode ,Agriculture Technology Management Agency ,Atma ,Agriculture and Farmers Welfare Department ,Bhavani district ,Dinakaran ,
× RELATED அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் செயல்விளக்க பயிற்சி