×

யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்: அண்ணாமலை பேட்டி

சென்னை: யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில் 103 தொகுதிகளை கடந்துள்ளோம். அடுத்து, நவம்பர் 15ம் தேதி மீண்டும் அரியலூரில் யாத்திரை தொடங்கும். ஜனவரி இறுதியில் யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். அப்போது, பிரதமர் மோடி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம். நிச்சயம் வருவார். ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள பெரியாரின் சிலையின் கீழ் இடம்பெற்ற வாசகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பெரியார் சிலை எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு மாற்றப்படும். அந்த சிலைக்கு உரிய மரியாதையை பாஜ கொடுக்கும். பாஜ பெரியாரை அவமதிக்கவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய கவுரவத்தை கொடுப்போம். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாஜ துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

* ஜெயக்குமாருக்கு பதிலடி
அண்ணாமலையிடம் நிருபர்கள், இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த விஷயத்தில், சிலர் கொக்கு, மீன் என்று பேசுகிறார்கள். சில, அரசியல் தலைவர்களுக்கு அந்த கொக்குக்கு இருக்கும் பொறுமை இருந்திருந்தால், அந்த கட்சிகள் தற்போது எங்கே நிற்கிறார்களோ அந்த பிரச்னை வந்திருக்காது. ஒரு கொக்கு காத்திருக்கும். அதேபோல் பாஜ காத்திருந்து 2026ல் ஆட்சியை பிடிக்கும். எங்கள் நேரம் 2026 என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

The post யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Yatra closing ceremony ,Annamalai ,Chennai ,Modi ,BJP ,president ,Annamalai.… ,closing ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...