×

இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் கம்யூனிஸ்ட் கட்சிகள் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் விடுத்துள்ள கூட்டறிக்கை: பாலஸ்தீன மக்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று இஸ்ரேல் வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு இந்திய நாடு ஆரம்ப காலத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த ஆதரவு நிலையில் இருந்து பாஜ ஒன்றிய அரசு முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்க அரசோடும், இஸ்ரேலுடனும் இணைந்து நிற்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்காமல் பாஜ ஒன்றிய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலை எடுத்தது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் செயலாளரும், பாதுகாப்புத்துறை செயலாளரும் இந்தியா வந்து, ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத்துறை அமைச்சகங்கள் மட்டத்தில் 7.11.2023 முதல் 10.11.2023 வரை பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பாஜ ஒன்றிய அரசு இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களிடம் 14.11.2023 முதல் 16.11.2023 வரை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, வட்டார அளவில் பரப்புரை இயக்கம் நடத்துவது என்றும், 20.11.2023 தலைநகர் சென்னையில் கட்சியின் மாநில தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் கம்யூனிஸ்ட் கட்சிகள் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Israel ,Chennai ,Communist Party of India ,CPI ,ML-Liberasan ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்