சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விசேஷ மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் அனைத்து பூக்களையும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். மேலும் வியாபாரம் இல்லாமல் பூக்கள் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் 25 டன் பூக்களை குப்பையில் கொட்டினர்.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.800, மல்லி, ஐஸ் மல்லி ரூ.500, ஜாதிமல்லி, முல்லை ரூ.300, சாமந்தி ரூ.40, சம்பங்கி ரூ.50, பன்னீர்ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.60, அரளி பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
The post தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு: கனகாம்பரம் ரூ.800, மல்லி, ஐஸ் மல்லி ரூ.500 appeared first on Dinakaran.