×

மருத்துவ கல்லூரியில் சடலங்களை கடத்திய 7 பேர் கைது

பர்துவான்: மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் மருத்துவ கல்லூரியின் உடல் கூறியல் துறையில் வைக்கப்பட்டிருந்த 3 சடலங்களை சிலர் நேற்று அமரர் ஊர்தியில் கடத்த முயன்றுள்ளனர். கல்லூரி காவலாளிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வாகனத்தை சோதித்தனர். அப்போது, சவப்பெட்டியில் ஒரு உடலும், ஸ்ட்ரெச்சருக்கு அடியில் 2 உடல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அமரர் ஊர்தி வாகனத்தில் இருந்தவர்களிடம் கேட்ட போது சடலங்களை உத்தரகாண்டுக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர். சடலங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி பெறாததால் வாகனத்தை வெளியே செல்ல முடியாதவாறு கல்லூரி வாசலை மூடி விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கடத்த முயற்சித்த 7 பேரை கைது செய்தனர்.

The post மருத்துவ கல்லூரியில் சடலங்களை கடத்திய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Burdwan ,Burdaman Medical College ,West Bengal ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...