×

இந்தோனேசியாவில் இன்று யு-17 உலக கோப்பை கால்பந்து தொடக்கம்

ஜகர்தா: ஆடவர் யு-17 உலக கோப்பையின் 19வது கால்பந்து போட்டி இன்று இந்தோனேசியாவில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரேசில் உட்பட 24 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை தலா 4 அணிகள் கொண்ட 6பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், லீக் சுற்றில் ரவுண்டு ராபின் முறையில் விளையாடும்.

இந்த ஆட்டங்கள் தலைநகர் ஜகர்தா, சுரபயா, சுரகர்தா, பந்துங் என 4 நகரங்களில் நடத்தப்படும். இன்று ெதாடங்கும் லீக் சுற்று ஆட்டங்கள் நவ.18ம் தேதியுடன் முடியும். தொடர்ந்து நவ.24, 25 தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், நவ.28ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதி ஆட்டம், கோப்பை பரிசளிப்பு விழா டிச.2ம் தேதி சுரகர்தாவில் நடக்கும்.

* பங்கேற்கும் அணிகள்
ஏ-பிரிவில் இந்தோனேசியா, ஈகுவடார், பனாமா, மொரோகோ, பி-பிரிவில் ஸ்பெயின், கனடா, மாலி, உஸ்பெகிஸ்தான், சி-பிரிவில் பிரேசில், ஈரான், நியூ கலேடோனியா, இங்கிலாந்து, டி-பிரிவில் ஜப்பான், போலாந்து, அர்ஜென்டீனா, செனகல், ஈ-பிரிவில் பிரான்ஸ், புர்கினா ஃபாசோ, தென் கொரியா, அமெரிக்க ஒன்றியம், எப் பிரிவில் மெக்சிகோ, ஜெர்மனி, வெனிசுலா, நியூசிலாந்து ஆகியே அணிகள் இடம் பெற்றுள்ளன.

* சாம்பியன்கள்
இதுவரை நடந்த 18 உலக கோப்பைகளில், அதிகபட்சமாக நைஜிரியா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிரேசில் 4 முறை சாம்பியனாகி இருக்கிறது. மேலும் கானா, மெக்சிகோ ஆகியவை தலா 2முறையும், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம்(ரஷ்யா), சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து ஆகியவை தலா ஒருமுறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

* இந்தியா
பிஃபா யு-17 கால்பந்து உலக கோப்பை தொடர்களில் மட்டுமின்றி பிஃபா நடத்தும் மற்ற உலக கோப்பை தொடர்களிலும் இந்திய ஆடவர் அணி பங்கேற்றதில்லை. அதே நேரத்தில் மகளிருக்கான 7வது யு-17 உலக கோப்பை 2022ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. அதில் போட்டியை நடத்தும் அணி என்ற முறையில் இந்திய மகளிர் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

The post இந்தோனேசியாவில் இன்று யு-17 உலக கோப்பை கால்பந்து தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : U-17 World Cup ,Indonesia ,Jakarta ,Men ,Brazil ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷியாவில் தங்கசுரங்கத்தில் நிலச்சரிவு 23 பேர்பலி; 35 பேர் மாயம்