×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, பரப்புரை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3வது வாரம் தொடங்கி டிசம்பர் 25ம்
தேதி முன் முடிவடையும். இந்நிலையில் தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால், இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Winter Session of the Parliament ,Delhi ,Parliament ,Winter Parliamentary Meeting ,Dinakaran ,
× RELATED எல்லோருக்கும் எல்லாம் என்ற...