×

பெரியாறு பிரதான கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பெரியாறு பிரதான கால்வாயில் விவசாயத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் 200 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு 10.11.2023 முதல் நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பு மற்றும் எதிர்ப்பார்க்கப்படும். நீர்வரத்தினை பொறுத்து தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.

The post பெரியாறு பிரதான கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Periyar main canal ,Chennai ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...