×

கில்-சாரா டெண்டுல்கர் மார்பிங் படம் வைரல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில். நேற்று ஐசிசி வெளியிடப்பட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதன்முறையாக நம்பர் ஒன் இடத்தை கில் பிடித்தார். இதனிடையே கில்லும், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் காதலித்து வருவதாக கிசுகிசு உள்ளது. கில் எங்கு விளையாடினாலும் மைதானத்தில் ‘சாரா-சாரா’ என ரசிகர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மும்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது ரசித்த சாரா, கில் சதத்தை தவறவிட்டு அவுட்டானபோது ஷாக் ஆனார்.

இதனிடையே சாரா, கில்லின் தோளில் கைகளை வைத்து கேமராவுக்கு போஸ் கொடுப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த படம் போலியானது. சாராவின் தம்பி அர்ஜுன் டெண்டுல்கருடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் கில்லின் முகத்தை வைத்து மார்பிங் செய்துள்ளனர். இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. இதனிடையே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த கில்லின் படத்தை டுவிட்டரில் சாரா பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் காதல் இமேஜையும் சேர்த்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கில்-சாரா டெண்டுல்கர் மார்பிங் படம் வைரல் appeared first on Dinakaran.

Tags : Kill ,Sarah Tendulkar ,Mumbai ,Subman Gill ,cricket team ,ODI ,ICC ,Kil-Sarah Tendulkar ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி...