×

மத்திய பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரசிடம் எந்தத் திட்டமும் இல்லை: பிரதமர் மோடி பேச்சு

 

போபால்: மத்திய பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜ இடையேதான் நேரடி மோதல் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜவும், இழந்த ஆட்சியை அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டுள்ளது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்கு காரணம். மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். வாக்குக்கு இருக்கும் இந்த சக்தியே, நம் நாட்டு எதிரிகளின் துணிச்சலை முறியடித்துள்ளது. பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சியால் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்குவதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தீர்மானம் செய்துள்ளேன்.

அரசின் நலத்திட்டங்களை அனுபவித்து வந்த போலி பயனாளர்களை அகற்றி உள்ளோம். இவர்கள் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டவர்கள். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டதால் தான் காங்கிரஸ் என்னை விமர்சனம் செய்கிறது. தற்போது நான் எங்கே சென்றாலும் அயோத்தி ராமர் கோயில் குறித்தே மக்கள் அதிகம் பேசுகிறார்கள். மகிழ்ச்சி அலை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. மத்திய பிரநேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை என இளைஞர்கள் முடிவு செய்துவிட்டனர். மத்திய பிரதேச தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் இவ்வாறு கூறினார்.

The post மத்திய பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரசிடம் எந்தத் திட்டமும் இல்லை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Madhya Pradesh ,PM Modi ,Bhopal ,Narendra Modi ,
× RELATED மகன் மீது பல கோடி மோசடி வழக்கு ம.பி....