×

டெல்லி, என்சிஆர் மட்டுமல்ல வங்கக் கடலையும் மூடியது பஞ்சாப் பயிர்க்கழிவு புகை : நாசா செயற்கைக்கோள் புகைப்படம்

புதுடெல்லி: பஞ்சாப்பில் எரிக்கப்படும் பயிர்க்கழிவு, டெல்லியை மட்டுமின்றி வங்கக் கடலையும் பாழ்படுத்தி கொண்டிருக்கிறது.டெல்லி, என்சிஆரில் தற்போது நிலவும் கடுமையான காற்று மாசுவுக்கு வாகனப்புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளில் இருந்து கிளம்பும் புகை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஒன்றிய அரசின் கட்டுப்பாடு உள்ளிட்ட எதையும் மதிக்காமல், விவசாயிகள் தொடர்ந்து தங்கள் நிலங்களில் உள்ள பயிர்க்கழிவுகளை எரித்து வருகின்றனர். கடந்த மாதம் 29ம் தேதி, ஒரேநாளில் 1,068 நிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே காலக்கட்டத்தில் எரிக்கப்பட்டதை விட இது 740 சதவீதம் அதிகம்.

பஞ்சாப்பில் உருவாகும் பயிர்க்கழிவு எரிப்பு புகை, டெல்லி, என்சிஆரில் மட்டுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தாக்கம் வங்கக் கடல் வரையில் நீண்டு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ‘வேர்ல்டுவிவ்யூ‘’ என்ற செயற்கைக்கோள் எடுத்துள்ள புகைப்படம் உறுதி செய்துள்ளது. வங்கக்கடலின் மீது பஞ்சாபில் இருந்து வரும் பயிர்க்கழிவு எரிப்பு புகை மூடி இருப்பதை இந்த புகைப்படம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

The post டெல்லி, என்சிஆர் மட்டுமல்ல வங்கக் கடலையும் மூடியது பஞ்சாப் பயிர்க்கழிவு புகை : நாசா செயற்கைக்கோள் புகைப்படம் appeared first on Dinakaran.

Tags : Delhi, NCR ,Bay of Bengal ,Punjab ,NASA ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...