×

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்கொட்டித் தீர்த்த அதி கனமழை: நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்ட நம்பியூர், திருப்பூர், மாவட்டம் அவினாசியில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் ஓவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி பகுதியில் கனமழை பெய்வது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மழை பொழிவு குறைவாக இருந்தாலும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக கீழ் கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக கீழ் கோத்தகிரி பகுதியில் 23 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கீழ் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்க கூடிய கிராமங்களில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழ் கோத்தகிரி பகுதியில் இருக்க கூடிய கிராமங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இருக்க கூடிய பொதுமக்கள் கோத்தகிரிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழையின் தாக்கம் இரவு இருந்ததை விட தற்போது குறைவாக உள்ளது. அதனால் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குண்டா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காக்களில் மட்டும் மழையின் தாக்கம் அதிகமகா இருப்பதால் அந்த 4 தாலுக்காக்களில் மட்டும் இருக்க கூடிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

தொடர்ந்து;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பில் 9.4 செ.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 9 செ.மீ மழை பதிவு

விருதுநகர், ஈரோடு, மதுரை, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்கொட்டித் தீர்த்த அதி கனமழை: நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri District ,Kotagiri ,Nilgiris ,Kothagiri ,Nilgiris district ,Kotagiri, Nilgiri district ,Dinakaran ,
× RELATED நாவல் பழங்கள் சாப்பிடுவதற்காக தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகள்