×

மோடி கல்வி சான்றிதழை வடிவமைத்து அச்சடிக்க தேவையான கணிணியை வழங்கியது காங்கிரஸ்தான்: பிரியங்கா காந்தி பேச்சு

போபால்: மத்தியப் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை பிரியங்கா காந்தி வெளியிட்டார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜ இடையேதான் நேரடி மோதல் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜவும், இழந்த ஆட்சியை அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை பிரியங்கா காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய அவர்; பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். 100 யூனிட் மின்சாரம் தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் பாதி சலுகையில் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 2 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம்: கோதுமைக்கு ரூ 2600, நெல்லுக்கு ரூ 2500 வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். போட்டித் தேர்வுக் கட்டணம் 100% தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கப்படும். ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும். எஸ்சி-எஸ்டி, ஓபிசி ஒதுக்கீட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். கற்க. கற்பிக்க திட்டம்: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி, 1-8 வகுப்புக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை, 9-10-ஆம் வகுப்புக்கு ரூ.1000, 11-12-ம் வகுப்புக்கு ரூ.1500 வழங்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; பாஜக கேட்கிறது 70 ஆண்டுகளில் என்ன நடந்தது? 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்றால், மோடி எப்படி பள்ளிக்குச் சென்றார்? பள்ளிக்கூடம் சென்று இருந்தால் அது காங்கிரஸால் கட்டப்பட்டது. மோடி கல்லூரிக்கு போனாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அவரது ‘முழு அரசியல் அறிவியல்’ சான்றிதழ் காங்கிரஸ் கொடுத்த கணினியில் அச்சிடப்பட்டது என கூறினார்.

The post மோடி கல்வி சான்றிதழை வடிவமைத்து அச்சடிக்க தேவையான கணிணியை வழங்கியது காங்கிரஸ்தான்: பிரியங்கா காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Priyanka Gandhi ,BHOPAL ,PARTY ,MADHYA PRADESH ,Madhya Pradesh State Legislature ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்...