×

கணியூர் ஊராட்சியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு; கோவை எம்.பி நடராஜன் திறந்து வைத்தார்

 

சோமனூர்,நவ.9: கணியூர் ஊராட்சியில் உள்ள குமார் நகரில் பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் திறந்து வைத்தார்.
குமார் நகரில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.16.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.ஊராட்சியின் துணைத் தலைவர் ராஜூ வரவேற்றார். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் சதீஷ் குமார், மகேஸ்வரி, பழனிசாமி, சிவக்குமார், உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, மற்றும் முத்துராஜு, வட்டார வளங்கள் அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவின் போது மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

The post கணியூர் ஊராட்சியில் பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு; கோவை எம்.பி நடராஜன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ganiyur Uratchi ,Govai ,M. P Natarajan ,Somanur ,Kumar city, ,Ganiyur Uradchi ,Ganiyur Uratsi ,Govai M. ,P Natarajan ,Dinakaran ,
× RELATED தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது...