×

வீட்டில் பூட்டை உடைத்து நகை, பொருட்கள் திருட்டு

 

ராஜபாளையம், நவ.9: ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் இருக்கும் மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று காலை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் சென்னையில் உள்ள முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்தது.சுமார் 15 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பட்டுப் புடவைகள் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை சென்ற முருகேசன் வந்த பிறகுதான் முழு விபரம் தெரியவரும். மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கதவை உடைத்து திருடப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post வீட்டில் பூட்டை உடைத்து நகை, பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Thiruvananthapuram Street, Rajapalayam ,Chennai ,
× RELATED நகராட்சி எல்லை அருகே சாலையோரம்...