×

இந்தியாவிலேயே நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பெருமை சேர்த்தவர் கலைஞர்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு

 

காரைக்குடி, நவ.9: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் முருகேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை வகித்து கலைஞரின் எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் குறித்து பேசினார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சுப்பையா கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், நீண்ட நெடிய சட்டமன்ற அனுபவம் கொண்டவர் கலைஞர். 1957 முதல் அவர் மறையும் காலம் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்தியாவில் நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் என்ற பெருமை பெற்றவர். மிகச் சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

சட்டமன்ற விவாதங்களில் நகைச்சுவையும் இருக்கும் கருத்துச்செரிவும் இருக்கும். எதிர்கட்சியினரும் கலைஞரின் பேச்சை கண்டு வியந்தனர். சட்டமன்ற நாயகர் என்ற தலைப்புக்கு ஏற்றவர் கலைஞர். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ் மொழி மீது பற்றுகொண்டவராக இருந்தவர். திரைப்படத்திற்கு கலைஞர் வசனம் என்றால் ஏராளமானோர் வந்து பார்க்ககூடிய வகையில் அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய எழுத்தாற்றல் பெற்று சிறந்த விளங்கியவர் என்றார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் உதவி பேராசிரியர் கண்மணி, முனைவர் பட்ட ஆய்வாளர் இளம்பரிதி, புவி அமைப்பியல் மாணவி அபிநயா, வரலாற்றுத்துறை மாணவர் முகமது பைசல், முனைவர் பட்ட ஆய்வாளர் வசந்தவள்ளி, இயற்பியல் துறை மாணவி தர்ஷிகா பேசினர். தமிழ்த்துறை இணை பேராசிரியர் துரை நன்றி கூறினார்.

The post இந்தியாவிலேயே நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பெருமை சேர்த்தவர் கலைஞர்: முன்னாள் துணைவேந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Former ,Speech ,Karaikudi ,Karaikudi Alagappa ,Govt Arts College ,Kalainar ,Assembly Leader ,
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரிப்பு