×

மடப்புரம் காளியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.12 லட்சம்

 

திருப்புவனம், நவ.9: திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு காணிக்கையாக பணம்,தங்கம்,வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் இடுவார்கள். இக்கோயில் காணி க்கை உண்டியல்கள் நாற்பது நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கமாகும். நிரந்த உண்டியல்கள் ஒன்பது உள்ளன. ஒன்பது உண்டியல்களையும் ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், தக்கார் பிரதிநிதி மூலலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களில் ரூ.12 லட்சத்து 14 ஆயிரத்து 686 ரூபாயும், தங்கம் 291 கிராம், வெள்ளி 173 கிராம் காணிக்கை செலுத்தப்பட்ட்டிருந்தது என கோயில் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தெரிவித்தார். உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள்,மதுரை அன்னபூர்ணா சேவா பக்தர் சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

The post மடப்புரம் காளியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.12 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Katha ,Ayyanar ,Bhadrakaliamman ,Department of Charities ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...