×

மாரியம்மன் கோயிலில் மங்களநாதர் சிலை பக்தர்கள் வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், நவ. 8: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் அருகே கமலாம்பிகை உடனுறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் கோயிலை அடைந்தனர். கமலாம்பிகை உடனுறை மங்களநாதர் சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனுறை மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post மாரியம்மன் கோயிலில் மங்களநாதர் சிலை பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Mangalanath ,Mariamman temple ,Velayuthampalayam ,Kamalambikai Udanurai Mangalanathar ,Semangi Mariyamman temple ,Noyal, Karur district ,Mangalanathar ,Mariyamman temple ,
× RELATED எரியாத மின்விளக்குகளால் விபத்து அபாயம் விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்