×

கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம்

பாவூர்சத்திரம், நவ.9: கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. இதில் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழப்பாவூரில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொதுசுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் தொடர்பான தீர்மானங்களாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் ராதா விநாயகப்பெருமாள், கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், வெண்ணிலா தங்கச்சாமி, சாமுவேல் துரைராஜ், பொன்செல்வன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Geezpavur Municipality Meeting ,Bhavoorchatram ,Keezhapavoor municipal council ,President ,Rajan ,Executive ,Geezappavur Borough Council ,Dinakaran ,
× RELATED கீழப்பாவூர் அருகே ரூ.6 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி