×

மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ.9: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே கருகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு(28), கூலி தொழிலாளி. இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 17ம் தேதி, தகராறு ஏற்பட்டதால், சுகன்யா கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, மனைவியை பாபு குடும்பம் நடத்த அழைத்தும், அவர் வர மறுத்து விட்டார். நேற்று முன்தினம் இரவு, தனது அறைக்கு தூங்க சென்ற பாபு நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுபற்றி அவரது தந்தை சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், மகாராஜகடை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Babu ,Karukur ,Maharajakadai, Krishnagiri district ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...