×

மேக்சிமம் நெருக்கடியை நொறுக்கிய மேக்ஸ்வெல்: சச்சின் பாராட்டு

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆஸி அணியை தனியாளாக கரை சேர்த்ததுடன், இரட்டைச் சதமும் விளாசிய கிளென் மேக்ஸ்வெல்லை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அதிலும் மேக்ஸ்வெல் காயத்துடன், வலியை பொறுத்துக் கொண்டு கடைசி வரை களத்தில் நின்றதும் எல்லோரையும் ஈர்த்துள்ளது. அவர்களின் ஒருவராக சச்சின் டென்டுல்கர், ‘என் வாழ்க்கையில் இதுப்போன்ற ஒருநாள் ஆட்டத்தை நான் பார்த்தே இல்லை. மேக்சிமம் நெருக்கடி இருந்த நேரத்தில் மேக்ஸ் நொறுக்கி தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்‘, வாழ்நாளில் அற்புதமான ஆட்டம். தலை வணங்குகிறேன்’ என்று புகழாரம் சூட்டியள்ளார். இப்படி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பென் ஸ்டோக்ஸ், மைக்கல் வேகன், முகமது கைப், என நீளும் பட்டியலில் ஆஸி, ஆப்கான் பயிற்சியாளர்களும் உள்ளனர். ‘எப்போதும் அதிரடியாக ஆடக்கூடிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நிலைமையை புரிந்துக் கொண்டு பொறுமை காத்து 68பந்துகளில் வெறும் 12ரன்கள் மட்டும் எடுத்து ஒத்துழைப்பு அளித்ததும் பாராட்டுக்குரியது’ என்று கம்மின்சையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

* ஆச்சரயம், பெருமை

மேக்ஸ்வெல், ‘இந்த இன்னிங்சில் நேர்மறையான நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த இன்னிங்சை சரியாக பயன்படுத்தியது எனக்கு ஆச்சர்யமாகவும்,பெருமையாகவும் உள்ளது’ என்று மகிழ்ந்துள்ளார்.

The post மேக்சிமம் நெருக்கடியை நொறுக்கிய மேக்ஸ்வெல்: சச்சின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Maxwell ,Sachin ,Mumbai ,Glenn ,Afghanistan ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...