×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6.498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரித்தது.

இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,238 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,702 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,498 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக அதிகரிப்பு: நீர் இருப்பு 21.003 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanakal Kaviri River ,Darumpuri ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...